உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை

United States of America Pakistan India World
By Independent Writer May 10, 2025 07:33 AM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

புதிய இணைப்பு

அணு ஆயுதங்களை கைவசம் வைத்துள்ள இந்தியா (India) - பாகிஸ்தான் நாடுகள் தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை பிராந்தியத்தில் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தின.

முதலாம் இணைப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். 

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை | Vance Says Us Wont Intervene In India Pakistan War

பாகிஸ்தானில் (Pakistan) உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய இராணுவம் வியாழக்கிழமை (8.05.2025) இரவிலிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்தியாவின் (Inida) ஓபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இதனைத் கூறியுள்ளார்.

முற்றாக மறுத்த பாகிஸ்தான்: சிதைக்கப்பட்டதா இந்திய இராணுவ தளங்கள்

முற்றாக மறுத்த பாகிஸ்தான்: சிதைக்கப்பட்டதா இந்திய இராணுவ தளங்கள்

ஆயுதங்கள் கீழே போட வேண்டும்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும்.

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை | Vance Says Us Wont Intervene In India Pakistan War

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தில் நாம் தலையிட போவதில்லை. அது நம் பணியும் அல்ல.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வசம் ஆயுதங்கள் கீழே போட வேண்டும் என அமெரிக்கா சொல்ல முடியாது.

இந்த மோதல் பிராந்திய ரீதியிலான போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறக்கூடாது என்பது நம் எதிர்பார்ப்பு. அப்படி நடந்தால் பேரழிவு ஏற்படும். இது அந்த நாடுகளின் தலைவர்கள் வசம் உள்ளது என வான்ஸ் கூறியுள்ளார். 

இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டு

இந்நிலையில், அரபிக்கடல் முழுவதும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை | Vance Says Us Wont Intervene In India Pakistan War

துறைமுகங்கள், கடற்பகுதிகளில் குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க இந்திய கடற்படை தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதோடு பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எச்சரிக்கும் பாகிஸ்தான்

இதேவேளை, இந்தியாவின் நடவடிக்கைகளால் பதற்றங்கள் தொடர்ந்து அதிக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.

உக்கிரமடையும் இந்தியா - பாகிஸ்தான் போர் - ஜி7 நாடுகள் அவசர கோரிக்கை | Vance Says Us Wont Intervene In India Pakistan War

இந்திய தரப்பின் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதன் காரணமாக பாரிய மோதல் ஒன்று உடனடியாக நிகழும் என்பதில் தனக்கு எந்த சந்தேகமு்ம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் இது நடந்தால்..! இந்தியாவுக்கு பாகிஸ்தானின் பகிரங்க மிரட்டல்

தொடர்ந்தும் இது நடந்தால்..! இந்தியாவுக்கு பாகிஸ்தானின் பகிரங்க மிரட்டல்

இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தின் அதிரடி அறிவிப்பு

இந்திய சிவில் விமானப் பாதுகாப்பு பணியகத்தின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020