அமெரிக்க விவகாரத்தில் மூக்கை நுழைத்த நெதன்யாகு! ட்ரம்ப் கொடுத்த பதிலடி
அமெரிக்கா துருக்கிக்கு F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான அறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்
இந்த விற்பனை குறித்துத் தன்னைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
துருக்கியிடம் ரஷ்ய தயாரிப்பான வான் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதால், அந்நாட்டிற்குப் போர் விமானங்களை விற்பனை செய்வது தற்போது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானதாகும்.
விற்பனை அனுமதி
இருப்பினும், துருக்கிக்கு இந்த விமானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Image Credit: NPR
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் குறித்துப் பேசிய ட்ரம்ப், "அவர் எனது நண்பர்; அவருக்கு நாம் என்ன விற்க வேண்டும் என்று வேறு யாரும் எனக்குச் உத்தரவிட முடியாது" என்றும், துருக்கி ஒரு சிறந்த நட்பு நாடு என்றும் கூறியுள்ளார்.
மேலும், "துருக்கி இஸ்ரேலின் மீது பெரிய ஆதரவு கொண்ட நாடு அல்ல" என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |