அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்தது அரசாங்கம்?

government staff salaries
By Vanan Oct 14, 2021 12:50 AM GMT
Report

கிழக்கு மாகாண அரச ஊழியர்கள் வருகின்ற தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்டுவர் என திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று (13)விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைக் கேட்டு இம்மாத சம்பளத்தில் இருந்து அதனை அறவிட ஏற்பாடு செய்துள்ளதாக அரச ஊழியர்கள் மிகவும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.

சகல பொருட்களினதும் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை அரச ஊழியர்களின் சம்பளத்தில் எந்தவித அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

மாறாக விடுமுறைக் கொடுப்பனவு, மேலதிக நேரக்கொடுப்பனவு எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பெருங்கஸ்டத்துக்கு மத்தியில் அரச ஊழியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கால கட்டத்தில் அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை அறவிடுவதென்பது கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வயிற்றில் அடிக்கின்ற நிலையாகும்.

குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களில் பயணிப்போருக்கு அரச ஊழியர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த பெரும் கஸ்டங்களை அனுபவித்து வரும் உண்மை நிலை தெரியாது.

தெரிந்திருந்தால் இப்படியொரு தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருக்க மாட்டார்கள். ஒரு நாள் சம்பளத்தை அறவிடும் தீர்மானம் தொடர்பில் தாம் அடுத்தவருக்கு இனங்காட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் விருப்பமில்லாமலே சம்மதம் தெரிவித்ததாக அரச ஊழியர்கள் பலர் என்னிடம் வேதனையோடு முறையிட்டனர்.

வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்திருக்கின்ற நிலையில், வேறு எந்த மாகாணங்களிலும் இல்லாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது குறைந்த பட்சம் சிலரது ஒரு நாள் உணவை துண்டாடும் செயலாகும்.

இது மனிதாபிமானமுள்ளவர்களால் அனுமதிக்க முடியாத நிலையாகும். இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புக்களை வெளியிட்ட போதும் அவை எவற்றையும் காதில் கொள்ளாது சம்பளத்தை அறவிடுவதில் அரசு குறியாக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது.

இதிலிருந்து அரச ஊழியர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் அரசில் இருக்கும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசுக்கு கூஜா தூக்குவோரும் கூட இந்த நிலையைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அரச ஊழியர்களின் நலன்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அப்படி அக்கறை இருந்திருந்தால் அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியிருப்பார்கள். நாம் எமது ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்கினோம்.

அவர்களது அடிப்படைச் சம்பளத்தை குறைந்த பட்சம் 100 வீதத்தால் அதிகரித்தோம். எதிர் காலத்தில் எமது ஆட்சி வருகின்றபோது அரச ஊழியர்களது நலன் பேணும் பல திட்டங்கள் எம்மிடம் உள்ளன. இதனை நாம் தெளிவு படுத்தியுள்ளோம்.

எனவே, கிழக்கு மாகாண அரச ஊழியர்களின் வேதனையும், கண்ணீரும் வருகின்ற தேர்தலில் இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை - இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025