நோயாளிகளால் நிரம்பி வழியும் அரச மருத்துவமனைகள்
கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் மருந்துகளின் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளதன் காரணமாக அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னர், இலங்கையில் 50 வீதமான நோயாளிகள் பொது வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கும் (OPD) மேலும் 50 வீதமானவர்கள் தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருத்துவ கிளினிக்குகளுக்கு (மருந்து நிலையங்களுக்கும்) செல்ல வேண்டியிருந்தது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
சட்டவிரோதமாக மருந்துகளை உட்கொள்வதும்
மற்றுமொரு நோயாளிகள் மேம்பட்ட சிகிச்சை முறைகளை நாடுவதும், மருத்துவ பரிந்துரைகள் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை உட்கொள்வதும் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மருந்துகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து
எனவே நோயாளிகளுக்கு அத்தியாவசியமான மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகளின் பட்டியலை உடனடியாக தயாரித்து அவற்றின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை கடந்த வருடம் அதிபர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்