அரச ஊழியர்களுக்கு வரப்போகும் பேரிடி: பயனற்றதாகும் சம்பள உயர்வு!
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம், மறுபுறம் பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தோடு, எதிர்காலத்தில் மேலும் சில வரிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வரி அதிகரிப்பு
தொடர்ந்தும் கூறுகையில், எதிர்கால திட்டமிடல் அற்ற வரவு - செலவு திட்டமே முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மேலும் சில வரிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
அவை வரவு - செலவு திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. ஒருபுறம் அரச உத்தியோகத்தர்களுக்கான வாழ்வாதாரக் கொடுப்பனவை வழங்குவதாகக் கூறிக் கொண்டு, மறுபுறம் பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்துள்ளனர்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |