ஆயிரக்கணக்கானோருக்கு கிடைக்கவுள்ள அரச வேலைவாய்ப்பு - வெளியான அறிவிப்பு
அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த விடயத்தை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியான நியமனங்கள்
சுகாதாரத் துறைக்கு 9,000 நியமனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 7,200 வெற்றிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எஞ்சிய தொகை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் சேவையின் தேவைக் கருதாது, அரசியல் ரீதியான நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |