யாழ். வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் - சுகாதார அமைச்சின் முக்கிய அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் (Jaffna district) உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் நிலவிவரும் மருத்துசேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார அமைச்சின் (Ministry of Health) பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள அரச மருத்துவமனைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அவசியமான மருந்துப் பொருட்கள்
இதன்போது, ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம்.
மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி பொது வைத்திய சாலை மற்றும் மாங்குளம் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் மனித மற்றும் பௌதீக வளங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் யாழ். மக்களை பாதிக்கக் கூடிய தொற்றாநோய்கள் தொற்று நோய்களை கட்டுப்படுத்தல் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் வைத்தியசாலைக்கு அவசியமான மருந்துப் பொருட்கள் தொடர்பிலும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது சுகாதார பணிப்பாளர் தீர்வு பெற்றுத்தரக் கூடிய சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்ததுடன் சுகாதார அமைச்சரிடம் தெரிவித்து ஏனைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
You May like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
