அரசாங்க நியமனம் இன்றி தவிக்கும் சுதேச மருத்துவ பீட பட்டதாரிகள் : சாணக்கியன் தெரிவிப்பு
இலங்கையில் சுதேச மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்களில் நாடளாவிய ரீதியில் சுமார் 1650 பட்டதாரிகள் அரசாங்க நியமனம் இன்றியும் எதிர்காலமும் இல்லாமல், அவர்கள் அன்றாடம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை அவர் நேற்று (01.04.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுதேச மருத்துவத் துறையானது ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி ஆகிய மூன்று துறைகளையும் உள்ளடக்கியது. சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் 5 ஆண்டுகள் இளங்கலைக் கல்வியும் அதன்பின் ஓராண்டு பயிற்சியும் (internship) உள்ளது.
எவ்வாறாயினும் உண்மையில் முடிவடையும் நேரத்தில் 7- 8 ஆண்டுகள் வரை நீடித்து செல்கின்றது. இவர்களது அறிவு, திறமை மற்றும் சேவைகள் நாட்டுக்கு பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், பல ஆயுர்வேத மருத்துவமனைகள் மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றன, மேலும் பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க முடியவில்லை.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |