ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்த அரச சேவை மருந்தாளர்கள்
வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி அரச மருந்தாளர்களால் கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைநிறுத்த நடவடிக்கையானது இன்று(20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாது உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சு அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கிராமிய மற்றும் பிரதான வைத்தியசாலைகளில் மருந்தாளர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு வருட பயிற்சியை முடித்த சிலரை மருந்து கலவையாளர்களாக நியமித்து பயிற்சியளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன்!! தமிழர் வாழும் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்!!(video)
பொது வைத்தியசாலை
இதேவேளை, வவுனியாவிலும் மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரச மருந்தாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்