போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்
Bandula Gunawardane
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
தொடருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று (01) வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நியாயமான விலை
மேலும் நியாயமான விலைக் கொள்கையை அங்கு ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி