நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை: எழுந்துள்ள சர்ச்சை
நாடளாவிய ரீதியில் அக்டோபர் 27 ஆம் திகதி திடீரெனப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தீர்மானமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எவ்வித தொழிநுட்ப ஆலோசனைகளோ அல்லது முன்னறிவிப்புகளோ இன்றி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன (Ajith Vijayamanna) இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்துக் கல்வி அதிகாரிகள் தங்களது திணைக்களத்திடம் எவ்வித உத்தியோகபூர்வ தெளிவுபடுத்தல்களையும் கோரவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய வானிலை
இந்தநிலையில் தற்போதைய வானிலை நிலவரத்தின் கீழ் பாடசாலை வகுப்புகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்துக் கல்வி அமைச்சுடன் எந்தவொரு முன் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேற்படி தகவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |