அரச ஊழியர்களுக்கான சம்பளம் - வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Money
By Sumithiran
6 நாட்கள் முன்
அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி அரச சேவையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் வழமை போன்று நாளையதினம் (25) வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
முன்னர் வெளியான அறிவிப்பு
முன்னதாக கடும் நிதி நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் இருவேறுதிகதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரச சேவையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்கு ஒரு நாளிலும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் பிறிதொரு நாளிலும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்