அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : வெளியான அறிவிப்பு
அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன{bandula gunawardane) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆரம்ப சேவைப் பிரிவிற்கான தகைமை
அரசாங்க சேவையில் ஆரம்ப சேவைப் பிரிவிற்காக உள்வாங்குவதற்கான தகைமையாக இலங்கை உடற்தகுதி வழிகாட்டி மற்றும் தொழில் நிபுணத்துவம் என்பவற்றின் அடிப்படையில் சேவைத் தேவைக்கேற்ப தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் முறையைப் பின்பற்றுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
தந்தை பிறப்பு சான்றிதழ் பெறச்சென்றவேளை : காசாவில் பிறந்து நான்கு நாட்களேயான இரட்டை குழந்தைகள் விமான குண்டுவீச்சில் பலி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |