அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் மகிழ்ச்சியான அறிவிப்பு
அரச துறையின் சகல துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு (Colombo) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டமை குறித்தும் அதிபர் ரணில் நினைவூட்டியுள்ளார்.
தனியார் துறை ஊதியம்
இதேவேளை, தனியார் துறையிலும் ஊதியத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இவ்வருடம் அதிக சலுகைகளை வழங்குவதற்கான பொருளாதார பலம் எம்மிடம் இல்லாவிட்டாலும் அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்காக அரச துறையின் சகல துறைகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |