பட்டப்படிப்பை நிறைவு செய்த நூற்றுக்கணக்கானோருக்கு வேலை இல்லை
அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி இளமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த 250 பேருக்கு வேலை இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு, பேராதனை மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250 கல்வி இளமானி பட்டதாரிகளுக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நியமனம் வழங்கப்படாமலுள்ளது.
ஆசிரியர் நியமனம்
இவ்வாறு 3 குழுக்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் காணப்படுகின்றனர்.
உயர்தரத்தில் அமைந்த பட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்ற அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் சூழலில், அமைச்சரவை முடிவுகள் காரணமாக நியமனங்கள் தாமதமாகியுள்ளன கல்வி இளமானி பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுங்கள்.
இவர்களின் நலன் கருதி சரியான நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம்.
நியமனங்களை வழங்கும் விடயத்தில் சட்டப் பிரச்சினை தடையாக இருந்தால், அந்த சட்டப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் நியமனங்களை பெற்றுக் கொடுங்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
