மக்களைப் பற்றி கவலை கொள்ளாத அரசாங்கம்! கஜேந்திரன் சாடல்
Parliament
People
Kajenthiran
By Chanakyan
மக்களைப்பற்றி சிந்திக்க தற்போதைய அரசாங்கத்திற்கு தெரியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொரோனா முகாமைத்துவத்தில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கோமாளித்தனமாக நடந்துகொள்கிறது.
மேலும் துறைசார்ந்த சுகாதாரத் தரப்பினரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல், இனவழிப்பை மேற்கொண்ட இராணுவத்திடம் ஒப்படைத்து பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி