கொரோனாவை வென்றுவிட்டோம் - ஆளும்தரப்பு அதிரடி அறிவிப்பு
corona
control
Gamini Lokuge
By Sumithiran
எதிர்க்கட்சியினர் எதிர்பாராத வகையில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
சரியான திட்டமிடல் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று நாட்டில் 75% க்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மூன்றாவது டோஸ் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கொரோனாவின் புதிய பிறழ்வான ஒமிக்ரோன் உலகை ஆட்டிப்படைத்துவரும் நிலையில் இலங்கை அரசாங்கம் கொரோனாவை வென்றுவிட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்