ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கிய கிழக்கு மாகாண ஆளுநர்!
Government Employee
By pavan
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 520 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இன்று(16) திருகோணமலையில் உள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , இராஜாங்க அமைச்சரான சதாசிவம் வியாழேந்திரன் , நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, விமல வீர திஸாநாயக்க மற்றும் பிரதான செயலாளர் .M.P.S திஸாநாயக்க உட்பட பல்வேறு முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்வியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள ஆசிரியர்களுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.




