அரசாங்கத்தின் செல்வாக்கு பாரியளவில் வீழ்ச்சி - கோட்டாபயவிடம் சென்றது புலனாய்வு அறிக்கை
மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செல்வாக்க குறித்த சமீபத்திய அறிக்கையை புலனாய்வுப் பிரிவினர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்களில் 3-4% பேர் தினசரி அரசாங்க சார்பு பதவிகளை விட்டு வெளியேறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அதன் செல்வாக்கை17% அதிகரித்திருப்பது அவர்களின் பிரபல்யத்தினால் அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பால் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கம் எவ்வாறு பாதிக்கப்படப் போகிறது அல்லது அவர்களுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து அவதானம் செலுத்துவதற்கு விரைவான பதில் இல்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
