வடக்கு மாகாண ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம்

Jaffna Sri Lankan Peoples P. S. M. Charles
By Dilakshan Jan 31, 2024 03:31 PM GMT
Report

மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கிராமங்களுக்கே சென்று ஆராயும் நடவடிக்கையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ஆரம்பித்துள்ளார்.

பல கிராமங்களின் மக்களை சனசமூக நிலையங்களூடாக ஒன்றிணைத்து, அவர்களுடன் கௌரவ ஆளுநர் சந்திப்புக்களை நடத்த வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய முதலாவது சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, பூம்புகார் பகுதியில் நேற்று (30) நடைபெற்றது.

சஜித் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த ரணில்: கிளம்பும் எதிர்ப்புகள்

சஜித் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த ரணில்: கிளம்பும் எதிர்ப்புகள்


மக்களின் பிரச்சினைகள்

அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனசமூக நிலையங்களின் அங்கத்தவர்களை ஆளுநர் நேற்று மாலை சிநேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

வடக்கு மாகாண ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம் | Governor Of Northern Province People Meeting

மேற்குறித்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில், காணி உறுதி இன்மை, வீட்டுத்திட்டம் கிடைக்காமை, கிணறுகள், சிறு குளங்கள் புனரமைக்கப்படாமை, வீதி சீரின்மை, மைதானம் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கிராம மக்கள் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடினார்கள்.

போதைபொருள் பாவனை

இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் , நோயாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம் | Governor Of Northern Province People Meeting

தொழில் இன்மை, பொழுதுபோக்கு செயற்பாடுகளுக்கான வசதிகள் இன்மை, போதைபொருள் பாவனைக்கு அடிமையாதல், பாடசாலை இடைவிலகல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிந்த கௌரவ ஆளுநர், அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டத்தில் உரிய முறையில் முன்னேடுக்கப்படாமை தொடர்பில் கவலை தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு கோரிக்கை

கிராமங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அந்ததந்த கிராம மக்கள் விரும்பி , உரிமை கோரும் செயற்திட்டங்களாக அமைய வேண்டும் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநரின், சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு ஆரம்பம் | Governor Of Northern Province People Meeting

அத்துடன், அரியாலை கிழக்கு, பூம்புகார், நாவலடி, மணியந்தோட்டம், உதயபுரம் ஆகிய கிராமங்களின் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் உள்ளுராட்சி மன்றங்களூடாக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், அந்த விடயங்கள் தொடர்பில் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகளை சமர்பிக்குமாரும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஏ9 வீதியின் இரு புறங்களிலும் கழிவகற்றும் பணி ஆரம்பம்

ஏ9 வீதியின் இரு புறங்களிலும் கழிவகற்றும் பணி ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026