வடமாகாண ஆளுநரின் உரையை வரவேற்கின்றது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
"பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் பொறுப்போடு மாணவர்களை வழிப்படுத்துகின்ற போதிலும் மாணவர்கள் சமூக பொறுப்பற்று செயற்படுவது வேதனைக்குரிய விடயம்" என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் கூறியிருந்தார்.
இன்று (27) வடமராட்சி கிழக்கு குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய வேளையே மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
மாணவர்களை வெளிப்படுத்தும் பொறுப்பு வெறுமனே அதிபர் ஆசிரியர்களுக்கு மாத்திரமல்ல சமூகத்திற்கும் உள்ள நிலையில், சமூகமும் பொறுப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வெளியுறுத்தினார்.
சிறிலங்கா தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்றிருக்கிறது
மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அவர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகளை மாணவர்கள் உதாசீனம் செய்வதும், பிறழ்வு பட்டு நடப்பதும் அவர்களுக்கு விரக்தியையும் வேதனையையும் அளிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆளுநர் உரையை சிறிலங்கா தமிழர் ஆசிரியர் சங்கம் வரவேற்றிருக்கிறது.
அதிபர் ஆசிரியர்கள் உயர்வான எண்ணங்களுடன் கடமை ஆற்றுவதனை வடமாகாண ஆளுநர் புரிந்து கொண்டதைப் போல ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.