டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல்

Kilinochchi Douglas Devananda Presidential Secretariat of Sri Lanka
By Independent Writer Oct 18, 2024 06:41 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபருக்கு வழங்கப்பட வேண்டிய விடுதியே இவ்வாறு அரசியல்வாதியான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் தனிப்பட்ட அலுவலரான அவரது இணைப்பாளருக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) செயற்பட்டு வந்தார். டக்ளஸ் தேவானந்தாவின் காலத்திலேயே இந்த விடுதி இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து...! நாமல் ராஜபக்சவை கைது செய்ய கோரிக்கை

உகண்டாவில் ராஜபக்சர்களின் சொத்து...! நாமல் ராஜபக்சவை கைது செய்ய கோரிக்கை

அரச அதிபர்

ஒருங்கிணைப்புக் குழுவின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலக சுற்றுநிருபத்தில் விடயங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல் | Govt Accommodation For Free To Private Officer

அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஒரு தனிப்பட்ட அலுவலருக்கு அரச விடுதி வசதி வழங்குவது குறித்துக் குறிப்பிடப்படாதபோதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் இந்த விடுதி வசதி சட்டமுரணாக வழங்கப்பட்டுள்ளது.

சட்டமுரணாக இந்த விடுயைக் கிளிநொச்சி மாவட்டத்தின் அப்போதைய அரச அதிபரான ரூபவதி கேதீஸ்வரன் (Rubawathy Ketheeswaran) வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்த விடுதியில் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியாளரே தங்கியிருந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக மாவட்ட செயலகத்தின் விடுதியில் தங்கியிருந்தமை மட்டுமன்றி அதற்கான வாடகைக் கொடுப்பனவு, மின்சாரக் கட்டணம் எவையும் அவரால் செலுத்தப்படவில்லை.

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

மின்சாரக் கட்டணம்

வாடகையோ அல்லது மின்சாரக் கட்டணமோ செலுத்தாமல் தங்கியிருந்த விடுதியின் இரண்டு ஆண்டு கால மின்சாரக் கட்டணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து கட்டப்பட்டுள்ளது என மாவட்ட செயலகம் எழுத்து மூலம் வழங்கிய தகவல் அறியும் சட்டத்தின் கீழான பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸின் இணைப்பாளருக்கு இலவசமாக அரச விடுதி : அம்பலமான தகவல் | Govt Accommodation For Free To Private Officer

மாவட்டச் செயலகத்தின் அரச விடுதியை சம்பந்தப்பட்டவருக்கு வழங்க இணக்கம் தெரிவித்து 2020.11.10 அன்று அப்போதைய மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் விடுதிக்கான மின்சாரக் கட்டணத்தைத் தங்களால் நேரடியாகச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளருக்கு விடுதியை வழங்குவதற்கான 2020.11.10 ஆம் திகதிய இணக்கக் கடிதத்தில் குறிப்பிட்டவாறான மின்சாரக் கட்டணம் அந்தக் கடித ஏற்பாட்டுக்கு மாறாக ஒருங்கிணைப்பு அலுவலக செலவில் இருந்து செலுத்தப்பட்ட காலத்திலும் அதே அரச அதிபரே பணியில் இருந்துள்ளார்.

இவற்றின் மூலம் இந்த விடுதிக்கான பொருளாதார வாடகை கணிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் ஆகியவற்றுக்கு அரச பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025