தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் 'இலங்கை' புதிய நகர்வு
தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதி
இலங்கையின் தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை தமிழிலும் பாடுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின விழாவின்போது தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் சுதந்திர தினத்தின கொண்டாட்டங்களின் போது தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தடை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய கீதம், சுதந்திர தின விழாவின் போது சிங்கள் மொழியில் மாத்திரம் பாடப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் புதிய நகர்வு
இந்த நிலையில், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரை முன்னிறுத்தி அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் புதிய நகர்வுகளை முன்னெடுத்துவருவதாக சுட்டிக்காட்டப்படும் நிலையில், தமிழ் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் வேண்டும்! ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம்
