கனடா பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலை: வீட்டிற்கு அனுப்பப்பட்ட பேராசிரியர்கள்
கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் என 10,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளன.
கனடாவில் உயர் கல்வி படிப்பதற்காக, வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் சென்று வந்தனர். அந்நாட்டு அரசு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
மாணவர் விசாவுக்கான எண்ணிக்கையில் கட்டுப்பாடு
மாணவர் விசாவுக்கான எண்ணிக்கையில் வரம்பை நிர்ணயித்தது. இந்த கட்டுப்பாடுகள் வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ள அந்நாட்டின் கல்லூரிகளுக்கே விளைவுகளை ஏற்படுத்தியது.
பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களை பணி நீக்கம்
கனடாவின் ஒன்டாரியோ நகரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். இந்தாண்டு விதித்த கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறைந்தது. அதை ஈடுசெய்ய அரசிடம் அவசர நிதியுதவி வழங்க கல்லூரி நிர்வாகங்கள் கோரின. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.
இதனால் பல கல்லூரிகள் துறைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. 10,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளன. அரசு தலையிடாவிட்டால் கல்லூரிகளில் பணி நீக்கம் அதிகரிக்கும் என ஒன்டாரியோ அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
