அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Sri Lanka Cabinet
By Shadhu Shanker
70 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (25) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இடம் பெற்றது.
இந்த கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது திறந்த விலைமனு கோரலின் பின்னர் இலங்கைக்கு, அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
அத்துடன் அரச வர்த்தக பல்வேறு சட்டபூர்வ கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை சந்தையில் இன்னும் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 16 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி