மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணம்
பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு (Ministry of Finance) அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று முதல் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனில் ஜெயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான காலணிகள்
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்கான வவுச்சர்கள் விநியோகத்தை பெப்ரவரி 5 ஆம் திகதிக்குள் அரசாங்கம் நிறைவு செய்யும் என்று கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் எற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு திறைசேரியிலிருந்து 15,000 ரூபாய் கொடுப்பனவும், ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10,000 ரூபா கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |