மன்னாரில் போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Mannar
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Independent Writer
Courtesy: நயன்
மன்னார் மாவட்டத்தில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு மன்னார் பிரதேச செயலகத்தினால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அரச காணி என அறியாமல் போலி ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதற்கமைய காணி கொள்வனவு செய்வதற்கு முன்னர் குறித்த காணி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் உண்மையானவையா என்பதை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காணி கொள்வனவு செய்வோர் உரிய ஆவணங்களை சரிபார்த்த பின்னரே கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |