மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் பெய்த கனமழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்து, மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்ததே இதற்குக் முக்கிய காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடையற்ற மின் விநியோகம்
இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், அதற்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின்சக்தி அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26