ரணிலுக்கு அஞ்சுகிறதா தேசிய மக்கள் சக்தி..!தன்னம்பிக்கையுடன் அநுர
தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும் பெரும்பாலான அரச ஊழியர்கள், காவல்துறை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இறுதி நேரத்தில் எந்த தேர்தல் மோசடிக்கும் வாய்ப்புகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறை (Matara) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு தந்திரமானவர் என்றும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுப்பதற்கு கடைசி நிமிடத்தில் எத்தகைய முயற்சியையும் மேற்கொள்வார் என சிலர் அஞ்சுகிறதாகவும் அநுர தெரிவித்துள்ளார்.
ரணிலின் தோல்வி
ஆனால் இம்முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுக்க விக்ரமசிங்கவால் எதுவும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ரணில் தோல்வியை ஏற்றுக்கொண்டு அமைதியாக வெளியேறுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
வாக்குப்பெட்டி பாதுகாப்பு
அவர் தேர்தலில் தோல்வியடைவதில் அனுபவம் வாய்ந்தவர். வாக்குச் சீட்டில் ஏதாவது செய்துவிடலாம் அல்லது வாக்குப்பெட்டியை மாற்றலாம் என்று சிலர் பயப்படுகிறார்கள். ஒன்றும் செய்ய முடியாது.
வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் பணியாளர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |