எரிபொருள் விலை குறைப்பின் பின்புலம்: சஜித் தரப்பின் குற்றச்சாட்டு
Fuel Price In Sri Lanka
SJB
R M Ranjith Madduma Bandara
Sri Lankan Peoples
By Dilakshan
தேர்தலை இலக்காகக் கொண்டு எரிபொருள் விலைகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலைக் குறைப்பு காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் மக்கள் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்
அத்தோடு, தேர்தல் நெருங்கும் வரை தேசிய மக்கள் சக்தியின் இந்த அன்பு இருக்கவில்லை எனவும் ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.
இந்த நிலையில், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து திரவ எரிபொருள்களினதும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்