பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - சஜித்
அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கம் தன்னிறைவில்
முன்னோக்கிச் செல்வதற்கு சமூக - பொருளாதாரத் திட்டம் தேவை என்றும், அரசாங்கம் மனிதாபிமான அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, நாட்டின் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என கூறியுள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் சுமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு
பொதுமக்கள் எதிர்நோக்கும் சுமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படவில்லை என அவர் விமர்சனம் வெளியிட்டார்.
அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருவதாகவும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் வழங்கிய வாக்குறுதிகளை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் நிறைவேற்றி வருவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
