மத்தள விமான நிலையம் தொடர்பில் முக்கிய தீர்மானம்
மத்தள விமான நிலையம் தொடர்பில் அநுர அரசாங்கம் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறவழி வரி நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதற்கமைய மாத்தளை சர்வதேச விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்லும் பயணிகளிடம் முன்னர் விதிக்கப்பட்ட 60 அமெரிக்க டொலர் புறப்பாடு வரி நாளை முதல் அறவிடப்படாது.
அரச - தனியார் பங்களிப்பு
அந்தவகையில், மத்தள சர்வதேச விமான நிலையத்தை அரச - தனியார் பங்களிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்தள விமான நிலையத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
இந்த முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் அனுர கருணாதிலக்க, அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்கான விருப்பம் கோரல்கள் அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்தல விமான நிலையத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தற்போது வரை மூன்று தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |