இந்திய எண்ணெய் விவகாரம் : ட்ரம்பிற்கு ரஷ்யா பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஷ்ய எண்ணெய்யை இனி வாங்கப்போவதில்லை என்ற இந்தியாவின் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள்.
மோடி உட்பட எவரிடமிருந்தும் வெளியாகாத அறிவிப்பு
பிரதமர் மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்கள் உட்பட வேறு யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை" என்று கூறினார்.

கடந்த வாரம் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்றும் அறிவித்தார்.
வரியை திரும்ப பெற்ற ட்ரம்ப்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியையும் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 21 மணி நேரம் முன்