வெளிநாடொன்றில் விமானியின் சாமர்த்தியம்: காப்பாற்றப்பட்ட 55 பயணிகள்
Flight
Somalia
By Jaso
தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட சோமாலிய விமானம் விபத்துக்குள்ளாகாமல் தரையிறங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சோமாலியாவின் உள்நாட்டு விமானங்களில் இயங்கும் 'ஸ்டார்ஸ்கி ஏவியேஷன்' விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
கடற்கரையில் தரையிறக்கப்பட்ட விமானம்
விபத்து ஏற்பட்டபோது விமானத்தில் 50 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்தனர்.

தலைநகர் மொகடிஷுவில் உள்ள விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டபோது இந்த கோளாறு ஏற்பட்டது. விமானி உடனடியாக விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பிய நிலையில் விமான நிலையத்திற்கு வெளியே கடற்கரையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
அதன்படி, விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போது போர் நடப்பது சமூக வலைத்தளங்களிலா...... 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்