மது உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி: திணைக்களம் எடுத்துள்ள முடிவு
மதுவரி வருவாயை அதிகரிப்பது உட்பட பல காரணிகளின் அடிப்படையில் இலங்கையில் மது உற்பத்தியாளர்களுக்காக ஒரு லீற்றர் (1000 மில்லிலிற்றர்) மதுபான போத்தல்களை உற்பத்தி செய்வதற்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக இந்நாட்டு மதுபான உற்பத்தியாளர்களுக்கு 180 மி.லி, 375 மி.லி, 750 மி.லி போன்றவற்றில் மதுபானம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் உற்பத்தியாளர்கள், 250 மி.லி, 500 மி.லி, 700 மி.லி மற்றும் 1000 மி.லி கண்ணாடி போத்தல்களில் மதுபானங்களை அடைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தரமற்ற மது விற்பனை
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம், பாவனையாளர் அதிகாரசபை மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினரால் இந்த உற்பத்தியை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தியாளர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது சந்தையில் 1000 மில்லி என விற்பனை செய்யப்படும் தரமற்ற மது விற்பனையை குறைப்பதற்கு இதுவும் வாய்ப்பாக அமையும் என மதுவரி திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்