அரிசியின் வரி குறைப்பு! வெளியான அதிவிசேட வர்த்தமானி
                                    
                    Ranil Wickremesinghe
                
                                                
                    Sri Lanka
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி, ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்படடுள்ளது.
அவ்வகையில், இதற்கு முன்னர் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கான விசேட வர்த்தக வரி 65 ரூபாவாக இருந்தது.
ஜனவரி 02 முதல்
மேற்படி இத்தீர்மானம் ஜனவரி 02 முதல் எதிர்வரும் 21 வரை நடைமுறைக்கு வருவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் 2007 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க விசேட சரக்கு வரிச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.
 
    
    சமய போதனைகளுக்கு இலக்காகி தற்கொலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு : அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        