ஆசிரியராக கூட வேலை பெற முடியாத நிலையில் சில பட்டதாரிகள்..! சபையில் போட்டுடைத்த அர்ச்சுனா
Sri Lanka Government
Education
Teachers
Ramanathan Archchuna
By Thulsi
யுனானி மற்றும் சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் பல ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்பை குறிப்பாக ஆசிரியர் பதவிகளை கூட பெற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர்மேலும் குறிப்பிடுகையில், 2009 ஆம் ஆண்டு பிரிவினர் தொடக்கம் இன்று வரை அரசு வேலை இல்லை.
மனவேதனையை தருகின்ற விடயம்
2016 ஆம் ஆண்டு பிரிவினருக்கு தான் கடைசியாக இன்டர்ன்ஷிப் வழங்கப்பட்டது.

மருத்துவராகப் பணியை தொடங்க முடியாததோடு ஆசிரியராகவும் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.
குறித்த விடயத்தில் எவரும் கவனம் செலுத்தாமல் இருப்பதானது மனவேதனையைத் தருகின்ற விடயம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |