ஆசிரியர் நியமனப் பரீட்சை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கல்வி அமைச்சின் அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Teachers
By Shalini Balachandran Oct 19, 2026 11:15 PM GMT
Report

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில், நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்த சர்சைகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இது தொடர்பில் தெளிவுபடுத்தலொன்றை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி (Teacher Service Minute) வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட இருமடங்கு விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதால் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டியல் குறித்த சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய இதற்குரிய மாற்றங்களை விளக்கியுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால்... மத்திய கிழக்கின் 9 நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால்... மத்திய கிழக்கின் 9 நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!

நேர்முகப் பரீட்சை

இதனடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் 23,600 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசாங்கத்தால் அனுமதி பெறப்பட்டுள்ளது.

பிரமாணக் குறிப்பின்படி 23,600 வெற்றிடங்களுக்கு இருமடங்காக 46,012 விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் நியமனப் பரீட்சை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Govt Teachers Competitive Exam Moe Announcement

ஆனால், வெளியிடப்பட்ட ஆரம்பக் கட்டப் பட்டியலில் 17,688 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தமை விண்ணப்பதாரர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தனிப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவர் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்கள் மற்றும் பதவிகளுக்குத் தகுதி பெற்றுள்ளமையாலேயே பட்டியலில் பெயர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது எனக் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

ஈரான் மீது கடுமையான பொருளாதார - இராணுவத் தாக்குதல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது கடுமையான பொருளாதார - இராணுவத் தாக்குதல்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

ஆட்சேர்ப்புத் திட்டம்

வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் அரச சேவையில் பணியாற்றும் 192 பட்டதாரிகள், எட்டுப் பாடங்களிலும் தகுதி பெற்றுள்ளதன் மூலம் அவர்கள் மட்டுமே 1,536 வெற்றிடங்களை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியைப் பெற்றுள்ளனர்.

இவ்வாறாக விண்ணப்பதாரர்கள் பல பாடங்களுக்குத் தகுதி பெற்றுள்ளதை மதிப்பீடு செய்கையில், உண்மையில் 46,018 தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சை செயல்முறைக்குத் தகுதி பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனப் பரீட்சை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கல்வி அமைச்சின் அறிவிப்பு | Govt Teachers Competitive Exam Moe Announcement

குறிப்பிட்ட சில பாடச் சேர்க்கைகளில் போதிய தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால் சில வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண மட்டங்களில் 41 பாடச் சேர்க்கைகளுக்கு எந்தவொரு விண்ணப்பதாரரும் தகுதி பெறவில்லை எனவும், மேலும் 124 பாடச் சேர்க்கைகளில் தேவையான எண்ணிக்கையிலான தகுதியான விண்ணப்பதாரர்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி

ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024