கிழக்கில் இயங்கும் தீவிரவாத குழுவிற்கு அரசினால் வருகிறது பேரிடி
கிழக்கு மாகாணத்தில் இயங்கும் முஸ்லிம் தீவிரவாதக் குழுவிற்கு எதிராக விசாரணைகளைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கிழக்கில் குறித்த குழு தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூடுதல் விபரங்கள்
அதன்படி, இந்தக் குழு பற்றிய கூடுதல் விபரங்களை கண்டறிய காவல்துறை புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தில் சில தகவல்களையும் வழங்கியதாக அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
