வெளியான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் - யாழில் முதலிடத்தை பெற்ற பாடசாலை
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் (Department of Examinations) நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது. யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 139 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் , யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன்186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன். யாழ். ஜோன் பொஸ்கோ மாணவனான அக்சாத் ராகவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
25 ஆண்டுகளின் பின் சாதனை
இதேவேளை, யாழ். வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் ஹன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன், உடுவில் மகளிர் கல்லூரியில் 61 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்து சாதனை படைத்துள்ளதுடன் குறித்த பாடசாலை தொடர்ந்து வலிகாம வலயத்தில் முதல்நிலை பாடசாலையாக மிளிர்ந்து வருகின்றது.
முதலாம் இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வெகு விரைவில் பெறுபேறு
உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, எமக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதற்கு.. . ஆனால் இதற்குக் காரணம், புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியால் நீதிமன்ற உத்தரவின் காரணமாகத் வினாத்தாள்கள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.
வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
You may like this....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
