ஈரானை இப்போது இயக்குவது யார்!
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து , அரசு கடமைகளைக் கையாள மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசை அமைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது .
சக்திவாய்ந்த அரசியலமைப்பு கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரான அயதுல்லா அலிரேசா அராஃபி, இடைக்கால அரசுக்கு தலைவராக ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
அதன் மற்ற இரண்டு உறுப்பினர்களாக ஈரான் நாட்டின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோலம்-ஹொசைன் மொஹ்செனி - எஜேய் ஆகியோர் காணப்படுகின்றனர்.
37 ஆண்டுகால ஆட்சி
சனிக்கிழமையன்று நடந்த ஒரு தாக்குதலில் காமெனியின் கிட்டத்தட்ட 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், நிபுணர்கள் சபை எனப்படும் 88 பேர் கொண்ட குழு புதிய உச்ச தலைவரைத் தற்போதைய ஈரானிய அரசியலமைப்பின் பிரிவு 111 இன் படி, தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால நாட்டை நிர்வகிக்கும்.

தலைமைத்துவ அமைப்பு இடைக்காலத்தில் அதன் நிர்வாகப் பங்கை ஏற்கும் அதே வேளையில், நிபுணர்கள் சபை ஈரானிய அரசியலமைப்பின்படி, முடிந்தவரை விரைவில் ஒரு புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஈரானின் நிபுணர்கள் சபையின் உறுப்பினர் ஒருவர், இந்த செயல்முறை நீண்டதாக இருக்காது என கூறியுள்ள நிலையில் குறித்த விடயம் எதிர்பார்புகளை தூண்டியுள்ளது.
அரசியல் மற்றும் கட்சி
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், தனிநபர்கள் அல்லது அரசியல் மற்றும் கட்சிப் பிரிவுகளின் தனிப்பட்ட விருப்பங்கள் ஒரு காரணியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் மற்றும் மதக் கொள்கைகளின்படி வாக்களிப்பார்கள் என்றும் நிபுணர்கள் சபையின் உறுப்பினர்கள் சத்தியம் செய்துள்ளதாக அலி மோலமி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போலவே, நிபுணர்கள் சபையும் புரட்சியின் தியாகியான தலைவரைப் போன்ற ஒரு ஆளுமையைத் தேர்ந்தெடுக்கும்," என்று அவர் சனிக்கிழமை காலை அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியைக் குறிப்பிட்டு கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |