வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (16) வெளியாகியுள்ளன.
இந்த பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையிலேயே, தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.

இந்த பரீட்சைக்காக 33, 7591 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றது.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்