பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்!
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Schools
By Pakirathan
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுபவர்களில் இருந்து புதிய ஆசிரியர்கள் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் விடுத்துள்ளார்.
புதிய ஆசிரியர்களை உள்வாங்குதல்

ஆசிரியர் சேவைக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கு, போட்டிப் பரீட்சை மூலம் 26,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நியமனங்களை வருகின்ற மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலும் 6,000 பட்டதாரிகள் கல்விப் பீடங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி