கிரீன்லாந்து தீவு விவகாரம் : டென்மார்க் பிரதமரை மிரட்டிய ட்ரம்ப்
கிரீன்லாந்து தீவை அமெரிக்கா (us)தன்வசப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தெரிவித்து வந்த நிலையில் அது தொடர்பாக தொலைபேசியில் டென்மார்க்(denmark) பிரதமரை தொடர்பு கொண்ட டொனால்ட் டிரம்ப், மிரட்டும் தொனியில் பேசியிருப்பதாக ஐரோப்பிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணியாமல் கிரீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அவரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென்(Mette Frederiksen).
கிரீன்லாந்தின் முக்கியத்துவம்
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலின்போது, அமெரிக்க தேசியத்தின் பாதுகாப்புக்காக ஆர்க்டிக் பிராந்தியமான கிரீன்லாந்தின் முக்கியத்துவம் குறித்து டென்மார்க் பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்துரைத்ததாக ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
டென்மார்க்க பிரதமரின் வாதம்
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின்போது, கிரீன்லாந்து விவகாரத்தில் இராணுவ தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரந்தளவிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த டென்மார்க் தயாராக இருப்பதாக டொனல்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென் எடுத்துக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், டென்மார்க்கின் வாதத்தை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டதாக இவ்விவகாரத்தை நன்கறிந்த அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக கடந்த 20-ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் முனைப்பு காட்டி வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |