பிக்குகளின் தாக்குதலில் படுகாயமடைந்த பாதுகாவலர்
ஹட்டன், கினிகத்ஹேன படுபொல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட ஆறு இளம் பிக்குகள் தம்மை தாக்கியதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பாதுகாவலராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் பல நாட்களாக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிறுவனத்திற்கு வந்திருந்த துறவிகளிடம் "ஏன் இவ்வளவு குடித்துவிட்டு இப்படி அநாகரிகமான வார்த்தைகளைச் சொல்கிறீர்கள்?" என கேட்டதற்கு,பிக்குகள்தம்மை தாக்கியதாக பாதுகாவலர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்ஹேன காவல்துறையில் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கினிகத்தேன காவல்துறையிடம் வினவப்பட்டபோது, இரு தரப்பினரையும் அழைத்து இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளாததால், முறைப்பாடு மத்தியஸ்த சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
