ரணிலுடன் இணைந்து நடிக்கும் உலகத் தமிழர் பேரவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Government
By Dilakshan Dec 10, 2023 07:26 PM GMT
Report

அதிபரின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று ரணிலுடன் இணைந்து உலகத் தமிழர் பேரவை நடிக்கிறார்களா, என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வினவியுள்ளார்.

அத்தோடு, தமிழர் விவகாரத்தில் அதிபர் ரணிலின் நல்லிணக்கம் தொடர்பாகவும் சபா குகதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறியுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவையின் குழுவினர் அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்களையும் பௌத்த பீடங்களின் பிக்குமாரையும் தொடர்ந்து யாழ் நல்லூர் ஆலயத்தையும் நல்லை ஆதினத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.'

அரசாங்க ஊழியர்களுக்கு ரணிலின் மகிழ்ச்சி அறிவிப்பு: ஜனவரி முதல் நடைமுறை

அரசாங்க ஊழியர்களுக்கு ரணிலின் மகிழ்ச்சி அறிவிப்பு: ஜனவரி முதல் நடைமுறை


அதிபரின் நல்லிணக்கம்

புலம்பெயர் தேசத்தில் தமிழர் அமைப்புக்கள் பல இருக்கின்ற போது அவ் அமைப்புக்கள் இடையே ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்தாமல் தனித்து உலகத் தமிழர் பேரவை சிங்கள அரசையும் தேரர்களையும் சந்தித்தமை ரணில் ராஐபக்ச அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் நோக்கமா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

ரணிலுடன் இணைந்து நடிக்கும் உலகத் தமிழர் பேரவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Gtf S Aim President Ranil S Ethnic Harmony

இன நல்லிணக்கம் ஏற்படும் வகையில் பிரகடனம் ஒன்றை அதிபர் ரணிலிடம் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன மிகவும் வேதனையாக உள்ளது, அதிபரின் நல்லிணக்கம் தமிழர் விவகாரத்தில் இதுவரை எப்படி இருக்கிறது என்று தெரியாது போன்று ரணிலுடன் இணைந்து உலகத் தமிழர் பேரவை நடிக்கிறார்களா?

தமிழர்களின் நிலங்களை அபகரித்தல் சிங்கள மயப்படுத்தல் , ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானத்தை நிராகரித்தமை, அரசியல் அமைப்பு சபையில் தமிழர் பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாமை, அரசியல் அமைப்பில் உள்ள 13 திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்த நாடாளுமன்றத்தை சாட்டியமை , வடக்கு மீனவர் பிரச்சினையை மேலும் சிக்கலுக்குள் தள்ளுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதியை தட்டிக்கழித்தல்.

நினைவேந்தல்களில் ஈடுபட்டோரை பயங்கரவாத சட்டத்தல் சிறையில் அடைத்துள்ளமை, தமிழர் தாயகத்தில் இந்திய சீனாவிற்கு இடையில் போட்டியை ஊக்குவித்தல், தமிழர் மீது சிங்கள இனவாதிகள் வீசும் இனவாத கருத்துக்களை கட்டுப்படுத்தாது வேடிக்கை பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் அதிபர் ரணிலின் இன நல்லிணக்கமா?

புதிய அரசியலமைப்பு 

ரணில் விக்ரமசிங்க அதிபராக வந்த பின்னர் தமிழர் விவகாரத்தில் கடந்த காலங்களைப் போன்றே சந்தர்ப்பவாத வேடம் போட்டு வருகிறார் இது உலகத் தமிழர்களுக்கே புரியும்.

ரணிலுடன் இணைந்து நடிக்கும் உலகத் தமிழர் பேரவை: எழுந்துள்ள குற்றச்சாட்டு | Gtf S Aim President Ranil S Ethnic Harmony

ரணிலின் தந்திரம் தெரிந்து தான் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய அரசியலமைப்பு வருவதற்கு முன்னர் நீங்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துங்கள் என கோரிக்கை வைத்தனர்.

அதனை எதிர்பார்க்காத அதிபர் ரணில் தன்னையே ஏமாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆதரவைப் பெற வேண்டும் என பொய் உரைத்தது மட்டுமல்லாமல் காவல்துறை அதிகாரம் தர மாட்டேன் என தான் தான் அரசியலமைப்பை தீர்மானிப்பவர் போல பதில் அளித்தார் இத்தோடு வெளியில் வந்தது ரணில் இனநல்லிக்க தீர்வு நாடகம்.

தற்போது உலகத் தமிழர் பேரவை குழுவிற்கு வழமையான பல்லவியை பாடியுள்ளார் ரணில் அதாவது புதிய அரசியலமைப்பு மூலம் தீர்வு தருவதாக இதனை வடிவேல் பாணியில் சொன்னால் வரும் ஆன வராது.

புலம் பெயர் தேசத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் பெரும் தியாகத்தின் பெயரால் வடிவமைக்கப்பட்டவை அதனை தரம் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டால் வரலாறு பதில் சொல்லும்” என்றார். 

போக்குவரத்து விதிகள் தொடர்பில் கடுமையான திட்டம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து விதிகள் தொடர்பில் கடுமையான திட்டம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ..!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி