மரங்களை கட்டிப்பிடித்து இளைஞர் படைத்த கின்னஸ் சாதனை
உலகில் சாதனைகள் என்பது பலவகை.அதிலும் கின்னஸ் சாதனை(Guinness record) படைக்கவேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமாக யோசித்து அந்த சாதனையை படைக்கின்றனர்.
அந்த வகையில் கானாவைச்(ghana) சேர்ந்த இளைஞர் ஒருவரும் வித்தியாசமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள்
அபுபக்கர் தாஹிரு(Abubakar Tahiru) என்ற 29 வயதான இளைஞரே இந்த வித்தியாசமான கின்னஸ் சாதனையை படைத்தவராவார். இவர் ஒரு வனவியல் ஆர்வலர் ஆவார்.ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் என்ற வகையில் ஒரு மணிநேரத்தில் 1123 மரங்களை கட்டிப்பிடித்து இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி
சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான காணொளியை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
ஒன்லைனில் பகிரப்பட்ட இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் 9 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |