கின்னஸ் சாதனை படைத்த நாய் -எதற்கு தெரியுமா..!
Guinness World Records
Portugal
By Sumithiran
அதிக காலம் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது நன்றியுள்ள ஜீவனான நாய்.
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த பாபி என்ற நாயே இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்ததாகும்.
இந்த நாய் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.அத்துடன் வயது முதிர்வு காரணமாக பார்வை குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்பட்டாலும், ஆரோக்கியமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை அவுஸ்திரேலிய நாய்
இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள் மற்றும் 150 நாட்கள் வாழ்ந்து உலகின் மிக அதிக வயது கொண்ட நாய் என்ற சாதனையை படைத்திருந்தது.
பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான் என தெரிவிக்கப்படுகிறது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி