கின்னஸில் இடம்பிடித்த உலகில் உயரமான பெண்
Turkey
guinness
tall woman
By Sumithiran
உலகிலேயே உயரமான பெண் என்ற உலக சாதனையை துருக்கியைச் சேர்ந்த 24 வயது பெண் படைத்துள்ளார்.
துருக்கியைச் சேர்ந்த ருமைசா கெல்கி என்ற பெண் தற்போது 7 அடி 7 அங்குலம் உயரத்துடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
வளர்சிதை மாற்றம் காரணமாக கெல்கி இவ்வாறு அசாதாரண உயரத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2014ம் ஆண்டு உலகிலேயே அதிக உயரமான டீன் ஏஜ் பெண் என்ற உலக சாதனையை ருமைசா கெல்கி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.