தமிழர் பிரதேசத்தில் ரி - 56 ரக துப்பாக்கி மீட்பு
Sri Lanka Police
Batticaloa
Law and Order
By Shalini Balachandran
5 days ago

Shalini Balachandran
in சட்டம் மற்றும் ஒழுங்கு
Report
Report this article
மட்டக்களப்பில் (Batticaloa) ரி - 56 ரக துப்பாக்கியொன்றும் மெகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியவட்டவான் பகுதியில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையினர் விசாரணை
குறித்த பகுதி முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பின்னர் படைமுகாமாக செயற்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மெகசின் கரடியனாறு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்